கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனாதிபதி அனுராவின் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்து முதன்நிலை பெற்றது போல் இன்றும் ஒரு தேர்தல் அங்கு நடைபெற்றால் அதற்கு வாய்பு இல்லை தமிழ்தேசிய கட்சிகளே வெற்றிபெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசனை வரவேற்று அம்பிளாந்துறை தமிழரசுக்கட்சி கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை ஶ்ரீ முத்துலிங்கப்பிள்ளையார் கோயில் முன்றலில் இன்று(24) ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் உரையாற்றுகையில்.
நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கொள்கைக்காக, தந்தை செல்வாவின் கொள்கைக்காகவே தமிழ்பொதுவேட்பாளராக பலருடைய வேண்டுகோளை ஏற்று சுயேட்சை குழுவாக என்னால் தெரிவு செய்யப்பட்ட சங்கு சின்னத்தில் போட்டியிட்டு இலங்கையில் ஐந்தாவது இடத்தில் 226432, வாக்குகளை பெற்று தமிழ்மக்களின் தமிழ்த்தேசிய கொள்கைக்கு மேலும் அங்கீகாரம் கொடுத்தேன் உலகத்தில் கண்களுக்கு புரியவைத்தேன்.
ஆனால் நான் சுயேட்சையாக எடுத்த சங்கு சின்னம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பெற்றது. என்னிடம் இருந்து பெறவில்லை நான் அவர்களுக்கு வழங்கவும் இல்லை அது ஜனாதிபதி தேர்தல் சினரனம் இப்போது பொதுத்தேர்தலில் அவர்கள் பாவித்தது பொதுத்தேர்தல் சின்னம்.
சிலருக்கு போதிய விளக்கமும் அறிவும் இன்றி கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் சங்கு சின்னம் எனது சின்னம் அதை விட்டு வீட்டுச்சின்னத்திற்காக நான் பிரசாரம் செய்வதாக குற்றம் சாட்டினர்.
நான் சின்னத்திற்காக எனது எண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியலோ சந்தர்பவாத அரசியலோ செய்பவன் இல்லை எப்போதும் தமிழ்த்தேசிய கொள்கைக்காகவே எனது அரசியல் பணி தொடர்ந்து செல்லும் என்பதை அனைவரைம் புரிவது நல்லது.
இப்போது கடந்த தேர்தலில் பலர் அதை உணர்தும் இருப்பார்கள்.
அடுத்ததாக இம்முறை பொதுத்தேர்தலில் யாழ்மாவட்டத்தில் தமிழ்தேசியகட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி் முன்னிலை பெறவில்லை என பலருக்கும் அதிருப்தியுள்ளது அது உண்மைதான் அதற்கான காரணம் கடந்த 15, வருடங்களாக தமிழ்தேசிய கட்சிகளும் அதன்தலைவர்களும் விட்ட சில தவறுகளுமல, இலங்கை தமிழ் அரசுக்கட்சிமீது கொண்ட அதிருப்தியும் என்பது உண்மை.
ஆனால் அந்த அதிருப்திக்காக ஒரு சிங்கள கட்சிக்கு இந்தளவில் மக்கள் ஜனாதிபதி அனுரவின் அலைகளில் சிக்குண்டு யாழ்மாவட்ட தமிழ்மக்களும் எதிர்பார்காத அளவில் அந்த கட்சிக்கு மூன்று ஆசனங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இப்போது அந்த கட்சிக்கு வாக்களித்த மக்களை ஜனாதிபதி அனுர ஏமாற்றிவிட்டார் என்பது அவருடைய செயல்களில் தெரிகிறது.
அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஷ்துள்ள 23, அமைச்சர்களாக இருக்கலாம் அல்லது 29, பிரதி அமைச்சர்களாக இருக்கலாம் ஒரு அமைச்சு பதவியைக்கூட யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வழங்கவில்லை யாழ்மாவட்ட மக்கள் அவருடைய கட்சிக்கு வழங்கிய ஆணையை அவர் புறம்தள்ளிவிட்டார்.
அடுத்ததாக அவர் கடந்த 21,ம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அக்கிராசன கன்னி உரையில் தமிழ்மக்களுக்கான இனப்பிரச்சனை தொடர்பான தீர்வு விடயத்தை பேசவில்லை. சரி அப்படி பேசாமல் விட்டாலும் நாட்டில் இப்படி வரு இனப்பிரச்சினை இருக்கின்றது, இருந்தது என்று கூட அவருடைய வாயால் உச்சரிக்க கூட முடியவில்லை.
பொருளாதாரம்.ஊழல், என்பவைகளை அடிக்கடி தொட்டுச்சென்ற ஜனாதிபதி அனுர அவர்கள் அதைவிட மிகமுக்கியமாக நாட்டில் தீர்க்கப்பட வேண்டியது இனப்பிரச்சினை என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் அதனை அவர் கூறாமல் விட்டது அவரை ஆதரித்த ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
தமிழினத்தின் தமிழ்தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு அத்திவாரம் இட்டு பல தமிழ்த்தேசிய தலைவர்களை உருவாக்கி வடகிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலை சரிவர முன்னகர்த்திய பெருமை யாழ்ப்பாணமண்ணையே சாரும் அப்படியான மண்ணில் இம்முறை தேசிய மக்கள் சக்தி முதன்நிலை பெற்றாலும் அதனை ஒரு பொருட்டாக ஜனாதிபதி அனுர எடுக்கவில்லை.
அவருடைய கட்சியில் யாழ்மாவட்டத்தில் மூவரும் வன்னியில் இருவருமாக வடக்கில் ஐவர் தெரிவானாலும் அவர்கள் அத்தனை பேரையும் சுயேட்சை குழுவில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்சனா போன்றே ஜனாதிபதி கருதுகிறாரா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுகிறது.
இலங்கையில் உள்ள 22, தேர்தல் மாவட்டங்களிலும் முதன் நிலை பெற்ற தேசிய மக்கள் சக்தியை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் முதன்நிலை பெற வைக்கவில்லை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் அனைவரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சுக்கே தொடர்சியான ஆணையை தந்துள்ளனர் இது இந்த வருடம் மட்டுமல் இலங்கையில் விகிதாசாரத்தேர்தல் நடைமுறை ஆரம்பமான 1989, தொடக்கம் 2024, வரை ஒன்பது தேர்தல்களிலும் மட்டக்களப்பு மாவட்டம் பேரினவாதக்கட்சிகளுக்கு சோரம் போனவரலாறுகள் இல்லை சிலர் இந்த வருடம் மட்டும்தான் மூன்று ஆசனங்களை பெற்றது போன்று நினைக்கிறார்கள் 2000, ம் ஆண்டும்2020, ம் ஆண்டும் மட்டுமே இரண்டு ஆசனங்களை பெற்றாலும் அதுவும் மட்டக்களப்பில் வேறு எந்த கட்சிகளும் முன்னிலை பெறவில்லை.
2004, ல் நான்கு ஆசனங்களை பெற்று சாதனை படைத்த நாம் ஏனைய சகல தேர்தல்களிலும் மூன்று ஆசனங்களை தொடர்ச்சியாக பெற்றே வந்தோம்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு தேர்தல் நடந்தால் அங்கும் அதிகூடிய ஆசனங்களை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியே பெறும் முடிந்தால் இருந்து பாருங்கள் எனத்தெரிவித்தார்.