லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்ட தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பதிலாக புதிய அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது. லிந்துலை பிராந்திய வைத்தியசாலைக்கு சொந்தமான காணியில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல பெரேரா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ரெய்ஷினி துரைராஜ், லிந்துலை பிராந்திய வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி அசேல சுரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்