மட்டக்களப்பு- ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த பத்து ஆண்டுகளின் பின்னர வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியவி. கனகசிங்கம் இவ்விழாவிலபிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
பாடசாலை பேண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எஸ்டி. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ். ரவிராஜா, ஏறாவூர்ப் பற்று -1 பிரதேச கல்வியதிகாரி ரீ.ராஜமோகன், கெடேட் கட்டளையதிகாரி லெப்டினன் கேர்ணல் பீ.அருண சாந்த, பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் பீ. மதியழகன், ஓய்வுநிலை கல்வியதிகாரி எம். தயானந்தன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
கல்விச் செயற்பாடுகள் மற்றும் புறக்கிருத்திய நடவடிக்கைகளில் திறமைகாட்டிய மாணவர்கள் இவ்விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலையிலிருந்து இம்முறை பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள், கெடேட் மாணவர்கள், அரசாங்க பொதுப்பரீட்சைகளில் திறமையான அடைவுகளைப்பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு முதலான துறைகளில் மாவட்ட , மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனையீட்டிய மாணவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு கலை மகள் மகா வித்தியாலயம் 142 வருட வரலாற்றைக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.