அறிவாலயம் அமைப்பினால் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2023ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெறவுள்ளது.

அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தினால், பட்டிப்பளையில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயத்தில் மு.ப.09.00மணிக்கு அதன் ஸ்தாபகர் அலையப்போடி நல்லரெத்தினம் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த கல்வி வலயத்திற்குட்பட்ட 76மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர். அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் ஆலோசகர் சி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், பிரதிக்கல்விப்பணிப்பாளர் வை.சி.சஜீவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
வருடாந்தம் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் குறித்த அமைப்பினரால் கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.