ஐயப்ப பக்தர்களின் கடவுச்சீட்டிற்கு உரிய நடவடிக்கையை புத்த சாசன மற்றும் சமய கலாச்சார அமைச்சு முன்னெடுக்க வேண்டும் –

புதிதாக பதவியேற்றுள்ள புத்த சாசன சமய மற்றும் கலாச்சார கலாச்சார அமைச்சரான ஹினித்தும சுனில் செனவி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்குவதாக கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திரன் குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார் .மேலும் இப்பொழுது சபரிமலை யாத்திரை காலம் ஆதலால் இந்த புனித யாத்திரை பயணத்தை மேற்கொள்ளும் புதிய ஐயப்ப பக்தர்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு மிகுந்த சிரமத்தை மேற்கொள்கின்றார்கள், அதே நேரம் கடவுச்சீட்டுக்கான தரகர்களும் கூடுதலான பணம் பெற முயற்சிக்கின்றார்கள் என்ற முறைப்பாடும் ஐயப்ப பக்தர்களிடம் எழுந்து வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

எனவே ஐயப்ப பக்தர்கள் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும் வண்ணம் அவர்களுக்கு இந்த கடவுச்சீட்டை விரத காலத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு உரித்தான ஆடையுடன் செல்லும் பக்தர்களுக்கு விசேட கரும பீடத்தை அமைத்து அந்தக் கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பாபு சர்மா அவர்கள் புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

kajaana chandrabose