நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு தேசிய மட்டத்தில் தொடரும் பதக்கங்கள்

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சேர். ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப் – 2024 விளையாட்டுப் போட்டி மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை சார்பாக கலந்து கொண்ட 12 வயதுப் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் ஹாரிஸ் முஹம்மத் ஹின்ஸான் ஓட்டப்பந்தயம் 80 மீற்றர் நிகழ்ச்சியில் 11.00 வினாடியில் ஓடி முடித்து 03ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

வெற்றி பெற்ற மாணவரை வாழ்த்துவதோடு,
இவரைப் பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கும் இவரது பெற்றோருக்கும் அஷ்ரக் சமூகம் சார்பாக பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.