( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மதீனா நகர் , காக்கையன் குளம் , இரணை இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த கவிஞர் கலைக்கீற்று; செ.க.முகமட் ஹுசைன் அவர்களுக்கு அண்மையில் பண்டார நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு , மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு; மற்றும் பௌத்த சம்மேளனம் கலைஅரண் அமைப்பு ஆகியன இணைந்து இவர் ஆற்றிவரும் கலைச்சேவைக்கு ‘கலாபூஷண பூமி புத்ர தேசபந்து’ என்னும் கௌவப்பட்டம் வழங்கப்பட்டது
கவிஞர் கலைக்கீற்று செ.க.முகமட் ஹுசைன் அவர்கள் பட்டிமன்றப் பேச்சாளரரகவும் 2020 இல் ‘மறுபடியும்’ 2024 இல் உலக சாதனை வெளயீடாக ‘தரையைத் தொடாத மழைத்துளி’ என்ற கவிதை நூல் வெளயீடுகளையும் வெளயீடு செய்திருந்தார்.
இவர் மன்னார் நகரில் அமைந்துள்ள மன்ஃ சித்திவிணாயகர் இந்துக்கல்லூரி மன்ஃஅல்அஸார் மகாவித்தியாலாயம் ஆகியவற்றின் பழைய மாணவருமாவார். என்பதும் குறிப்பிடத்தக்கது.