ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுமார் முப்பது வருடங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டவர் என்பது தமிழ் மக்கள் அறிந்ததே. இணக்க அரசியல் ஊடாக பேரினவாத தலைவர்களுடன் பக்குவமாக பேசி படிப்படியாக ராணுவ முகாம்களை நீக்கி பாதைகளை திறந்து மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வீடு அமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி மற்றும் விவசாய பயிர் வளர்ப்பு திட்டங்கள் மற்றும் பல போக்குவரத்து அபிவிருத்திகள் என்பவற்றை படிப்படியாக செய்து வடக்கு மாகாணத்தில் ஒரு இயல்பான வாழ்வு நிலையை கொண்டு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்த வகையில் இம்முறை குறிப்பாக வடக்கு வாழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செய்த அபிவிருத்தியை மறந்து அவருக்கு வாக்களிக்காதது ஏன்? வடக்கு மக்கள் அபிவிருத்தியை விரும்பவில்லையா? அதுதான் காரணமா? என பாபு சர்மா கேள்விக்கணை தொடுத்துள்ளார்.மற்றும் கொழும்பு வாழ் மக்கள், ஊடகங்கள்,மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஆகிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தந்த ஆதரவுக்கு பாபு சர்மா நன்றிகளையும் தெரிவித்துள்ளார். .