பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழரசின் தேசிய பட்டியல் விபரம் இதோ.

(திவாரகா)

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்காக 11.10.2024 இன்று திகதியிடப்பட்டு பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட இரு பெண்கள் உள்ளடங்களாக 18பேர் அடங்கிய பெயர்பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அப்பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பாமல் சுத்துமாத்து செய்த ப.சத்தியலிங்கத்திற்கு அவரின் நேர்மை ,கட்சிமீதும் மக்கள்மீதும் கொண்டுள்ள விசுவாசம் காரணமாக  டாக்டர் ப.சத்தியலிங்கத்திற்கு அடிமட்ட தொண்டர்களின் கருத்தினை கவனத்தில் கொள்ளாமல் தேசிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலில் 18 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் அதில் இரு பெண்களின் பெயர்கள் மாத்திரமே காணப்படுகின்றது.

தேசிய பட்டியல் விபரம் ஏன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவில்லை என்ற காரணத்தை தமிழரசுக்கட்சி மக்களுக்கு தெரிய படுத்தவேண்டும்.

பட்டியலில் உள்ள பெயர் விபரங்கள்

யாழ் மாவட்டம்.

1.சோ.சேனாதிராஐா 2.சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் 3.த.தயாபரன் 4.திருமதி மகேந்திரன் நிர்மலாதேவி.

மன்னார்

அந்தேனி கிறிஸ்டி யோசப் றெவால்

மட்டக்களப்பு.

1.க.குருநாதன் 2.திருமதி கே.றஞ்சினி 3.அ.சுகுமாறன்

அம்பாறை

1.பொன்.செல்வநாயகம் 2.வி.குலசேகரம் 3.த.சகாதேவராஐா

வவுனியா

1.எஸ் .சிவசோதி 2. என்.கருணாநிதி 3.பி.நடராஜ்

கிளிநொச்சி

த.குருகுலராஜா

முல்லைத்தீவு

கே.விமலதாஸ்

திருகோணமலை

1.வி.விஜயகுமார் 2.வி.சுரேஸ்குமார்.