பாராளுமன்றத்திற்கு தமிழர் தாயகத்திலிருந்து 4 வைத்தியர்கள்.

திவாரகா

நடந்து முடிந்த 2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முதற்தடவையாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து நான்கு தமிழ்  வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பைச்சேர்ந்த டாக்டர் இளையதம்பி சிறிநாத் வவுனியாவைச்சேர்ந்த  டாக்டர் ப.சத்தியலிங்கம்  தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த டாக்டர் எஸ் சிறி பவானந்தராஜா சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா போன்றோரே பாராளுமன்றத்தை அலங்கரிக்கவுள்ளனர்.

இதேவேளை இவ்வாண்டு 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.