அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற விஜிதஹேரத்திற்கு பாபுசர்மா வாழ்த்து செய்தி!

இம்முறை நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் அது கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அமைச்சர் விஜிதஹேரத்துக்கு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பாபு சர்மா வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்ததற்கான சான்று வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 3 ஆசனங்களை பெற்று தமிழ் மக்களின் மனதை வென்றெடுத்தமைக்கான சான்றாக இருக்கின்றது .

மேலும் தமிழ் மக்களுக்கான சேவைகள் தொடர வேண்டும். அவர்களுக்கான ஒத்துழைப்பும் உங்கள் கட்சியினருக்கு கிடைக்கும். மேலும் இந்து மக்கள் சார்ந்த சேவைகளுக்கும் அவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் விஜித ஹேரத் அவர்களிடம் பாபு சர்மா கேட்டுக் கொண்டார்.அத்துடன் பாபு சர்மாவுக்கு விஜிதகேரத் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.