எதற்காக எனக்கு வாக்களித்தீர்களோ அதற்கு எதிராக ஒரு துளியேனும் எதிராக செயற்பட மாட்டேன். உங்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன் என இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சு.பிரதீப் தெரிவித்தார்.
விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
வரலாற்றில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வாக்களிப்பின் மூலம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த என்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றி கூறுகின்றேன். எதற்காக எனக்கு வாக்களித்தீர்களோ அதற்கு எதிராக ஒரு துளியேனும் எதிராக செயற்பட மாட்டேன். உங்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். என்றார்.