கொலையாளிகள் தண்டிக்கப்படும் வரை : குரல்கொடுப்போம் – ஞா.சிறிநேசன்.

கடந்த காலங்களில் ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான நீதி கிடைக்க கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர்களுக்கான சுயநிர்ண உரிமை கிடைக்க வேண்டும். இவை போன்ற விடயங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தமிழரசுகட்சி வெற்றி பெறுவதற்கு உழைத்த சக வேட்பாளர்களுக்கும், தமிழரசு கட்சியை ஆதரித்த மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாம் ஒற்றுமையாக தொடர்ந்து செயற்படுவோம். எமது மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக முயற்சிப்போம் என்றார்.