மட்டக்களப்பு மாவட்டத்தில் 61வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்று நிறைவடைந்திருக்கின்றது. வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா தொகுதியில் 61.43வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 62.39வீதமும், பட்டிருப்பு தொகுதியில் 59.02வீதமும் வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளது.