உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும்

2024 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பாக ஊடக வழிகாட்டிநெறியைப் பின்பற்றுமாறு அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடக நிருவாகத்தினருக்கு அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டார அறிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்வரை, உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.