தென்பகுதியிலே ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து எமது மக்களும் ஊழலற்ற புதுமுக இளைஞர்களை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்
அத்துடன் அவர்கள் படித்தவர்களாகவும் சமூக சேவையாளர்களாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கமைய வன்னித் தேர்தவ் தொகுதியில் ஒரு இளம் சட்டத்தரணியாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தரணி செல்வராஜா டினேஸ் என்பவர் வன்னித் தேர்தல் தொகுதியில் வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 9 இல் தேர்தலில் களம் இறக்கியுள்ளார்
இவர் ஏழ்மையில் வாழ்ந்தமையால் ஏழ்மை வாழ்க்கை , மக்களின் ஏழ்மையின் வாழ்வை நன்கு உணர்ந்தவர். பின் இவர் படித்து பட்டம் பெற்று ஒரு சட்டத்தரணியாக வந்ததும் அன்று தொடக்கம் ஏழ்மையில் வாழ்வோருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற உயர் சிந்தனையுடன் இன்றும் இலை மறை காயாக கஷ்டம் , துன்பம் என்று அவரிடம் ஓடி செல்பவர்களுக்கு அவரால் இயன்ற உதவிகளை செய்து வருவது யாவருக்கும் தெரிந்த விடயம்.
ஐந்தில் எவ்வாறு வளைத்து எடுக்கின்றார்களோ அவ்வாறு ஐம்பதிலும் இருப்பார்கள் என்பார்கள். இவர் சிறுவனாக படித்தக்காலத்தில் இவரின் கிராமத்தில் கல்வியிலும் , ஒழுக்கத்திலும் , சேமிப்பிலும் மற்றும் பிறருக்கு உதவி செய்வதிலும் வருடந்தோறும் நடாத்தப்படும் செயற்பாட்டில் முதன் முறையாக தங்க மெடல் பெற்றவரான எஸ்.டினேஸ் தற்பொழுது வன்னி தேர்தல் தொகுதியில் வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 9இல் களம் இறக்கப்பட்டுள்ளார்
மன்னார் லயன்ஸ் கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்ட தங்க மெடல் சூட்டப்பட்ட விழாவில் இந்த தங்க மெடல்களை வருடந்தோறும் வழங்கி வந்தவர் ஓய்வுநிலை எந்திரி லயன் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடுவதில் பெருமை அடைகின்றேன்.
என்னை பொறுத்தமட்டில் நான் ஐம்பதுக்கு மேற்பட்ட வருடங்களாக ஒரு செய்தியாளராக இருந்து வருகின்ற வேளையில் எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவன்.
மதம் இனம் கட்சி மறந்து யார் கஷ்டம் , துன்பம் , ஏழ்மை மக்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவி செய்யும் பொழுது அவர்களை நேசிப்பது எனது பண்பாட்டில் ஒன்றாகும்.
அந்த வகையிலேயே இன்று தேர்தல் களத்தில் நிற்கும் சட்டத்தரணி எஸ்.டினேஸ் வீட்டுச் சின்னம் 9 என்பவர் சிறு வயதில் எதைக் கற்றுக் கொண்டு இன்று ஒரு வசதிப் படைத்தவராக வளர்ந்த போதும் ஐந்து வயதில் எதைக் கற்றுக் கொண்டாரோ இன்றும் மக்கள் தொண்டனாக இலை மறை காயாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் ஒரு நற்பண்பு கொண்டவராக திகழ்கின்றார் என்றால் அவரின் கழுத்தில் சூட்டப்பட்ட தங்க மெடல் இன்றும் கதை சொல்லுகின்றது என்பது எனக்கு மகிழ்ச்சியை ஊட்டுகின்றது என்பதாலே இதை இங்கு பதிவு செய்கின்றேன்.
நான் இவருக்காக போலி பிரச்சாரம் செய்கின்றேன் என யாரும் நினைத்து விடாதீர்கள். அவ்வாறு நினைத்தாலும் நான் கவலை அடையப் போவதில்லை.
ஒருவர் வாழும்போதே வாழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தகுந்த நேரத்தில் இதை தெரிவிக்கின்றேன்.
கடந்த காலங்களில் கண்ணுக்குத் தெரியாது மக்கள் சேவையே மகேசன் சேவையென தனது உதவிக்கரம் நீட்டிய வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 9இல் போட்டியிடும் திரு.செல்வராஜா டினேஸ் அவர்களை இறைவன் சித்தம் கொண்டால் பாராளுமன்றம் அனுப்பி வன்னி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற அருள்புரிய வேண்டும் என்று வாழ்த்தி நிற்கின்றேன்.
(வாஸ் கூஞ்ஞ)