பெரும்பாலான தமிழ் பேசும் வேட்பாளர்களைக் கொண்ட சிறுபான்மை கட்சிகள் காலத்துக்கு காலம் பெரும்பான்மை கட்சிகளுடன் தங்களுக்கான உடன்படிக்கைகளை செய்து தங்களது அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.
பின்னர் ஏதோ ஒரு மனம் முறிவு ஏற்பட்டால் அவர்களுடனான உறவை துண்டித்துக் கொண்டு அதுக்கு சாக்கு போக்கான காரணங்களை கூறி மக்களிடத்தில் தப்பிவிட நினைக்கின்றார்கள். பெரும்பான்மை கட்சிகளுக்குள் இருந்தாலும் எங்களுடைய தனித்துவம் இழக்க மாட்டோம் என்று கூறினாலும் பின்னர் சில சில அரசியல் தேவைகளுக்காக அவர்களிடம் கெஞ்சுவதையும் அவர்கள் செய்யாவிட்டால் இந்தப் பழம் புளிக்கும் என அவர்களை கைவிடுவதையும் பத்திரிகைகளில் நிறையவே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்துவமான பாதை, தமிழ் மக்களுக்கான சேவை என செயற்படுகிறது.
அதேவேளை அனைத்து இன மக்களையும் அரவணைத்து தான் அரசியலை முன்னெடுக்க முடியும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மை கட்சிகளுக்குள் அகப்படாமல் தனித்துவமாக நின்று பின்னர் அரசு அமையும் பொழுது இணக்க அரசியலின் ஊடாகத்தான் தமிழ் மக்களுக்கான சேவைகளை செய்ய முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் தனித்துவத்தையும் பேணி அதே நேரம் பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசி மக்களுக்கான சேவைகளை சாணக்கியமாக முன்னெடுப்பதில் டக்ளஸ் தேவானந்தா வல்லவர். மேலும் பெரும்பான்மை கட்சிகளுக்குள் ஒளிந்திருக்காமல் தனித்துவமான கட்சியாக மிளிரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு கொழும்பு வாழ் மக்கள் நிச்சயம் ஆதரவு கரம் நீட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
kajaana chandrabose
journalist