நாவாந்துறையில் ஜனநாயக தேசிய கூட்டணியின் மாபெரும் தேர்தல் கூட்டம்.

தபாற்பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் 10/11 ஞாயிற்றுகிழமை காலை நாவாந்துறை சென்.மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

மேற்படி நிகழ்வில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட சக வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.