வாக்களிக்கும் உரிமையும், பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இரண்டாம் நாளாக (09) திருகோணமலை நகர சபை பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது
இக்கலந்துரையாடலை திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரதேச சிவில் வலையமைப்புகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைந்து நடாத்தப்பட்டது
இலங்கையில் எதிர்வரும் 14.11.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிக்கும் உரிமை, தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடலை திருகோணமலை மாவட்ட த்தில் AHRC நிறுவனத்தினால் உருவாக்கி செயற்பட்டு வரும் பிரதேச சிவில் அமைப்புகள், போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்கான வலையமைப்பு மற்றும் மாற்றத்துக்கான இளைஞர் வலையமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தெளிவினை ஏற்படுத்துவதற்காக இக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணும் வகையில் நிலையான அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த கோரிய சிவில் வலையமைப்புகளின் கோரிக்கைக்கான தெளிவினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றது.
இதன் போது வளவாளராக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பிராந்திய இணைப்பாளர் திரு A.L இசைடீன் AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.க. லவகுசராசா, பிரதி இணைப்பாளர் திரு.அ.மதன் மற்றும் திட்ட முகாமையாளர் செல்வி. நா. மிரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்
கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிளவு மற்றும் ஒற்றுமையின்மை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளை உருவாக்குவதற்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் மக்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.