அகவை 67ல் டக்ளஸ் தேவானந்தா – இந்து மத பீடம் வாழ்த்து

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர்ருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று 10/11/2024 தனது 67ஆவது அகவையில் தடம் பதிக்கிறார்.

தமிழ் மக்களை தனது முழுமூச்சாக அவர்களை மனதில் கொண்டு 30 வருடங்களாக சேவையினை செய்துவருபவர். மிகவும் எளிமையாக வாழ்பவர் .மற்றவர்களுடன் நட்புறவை பேணுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது 10 மாவட்டங்களில் தமது கொள்கைகளை பரப்பு முகமாக தேர்தல் களத்திலும் உறங்கியிருக்கின்றார் பாராளுமன்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்காக அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று தளராது ஜனநாயக மரபை பேணி வரும் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணங்கள் கைகூட வேண்டும் அன்று இறைவனைப் பிரார்த்தனை செய்து சர்வதேச இந்து மத பீடம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன் துணைச்செயலாளர் பிரம்மஸ்ரீ கனக பாலச்சந்திரா சர்மா தனது வாழ்த்துச் செய்திகள் தெரிவித்துள்ளார்.

kajaana chandrabose