ஏ9 பாதை திறப்பிற்காக சரத் பொன்சிகாவுடன் வாதாடி வென்றவர் டக்ளஸ்

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஏ9 பாதையை திறக்க வேண்டும் என்ற முனைப்புடன் அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேக்காவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் பொழுது ராணுவ பாதுகாப்பு தளபதி சரத்பொன்சேகா தற்போது தான் யுத்தம் முடிவுற்றிருக்கின்றது. பாதைகள் ஒழுங்காக இருக்காது பல இடர்பாடுகள் இருக்கின்றது. இப்போது பாதை திறப்பதற்கு சாத்தியம் இல்லை என பாதை திறப்பதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சரத் பொன்சேகாவிடம் நியாயமான காரணங்களை எடுத்துரைத்து மக்கள் நலனை மனதில் முன்னிறுத்தி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வளவு காலமும் மூடப்பட்டு கிடந்த வடக்கு தெற்கு சமாதான பாதையை திறப்பதன் மூலம் மக்களிடையே அன்னியொன்னிய உணர்வு நிலை ஏற்பட்டு ஒரு சமாதான சூழல் ஏற்படும் எனும் கருத்தினை ஆணித்தனமாக முன் வைத்திருந்தார்.

சற்று யோசித்த ராணுவ தளபதி நாட்டின் நலனுக்காகவும் மக்களின் இன நல்லுறவு மேம்படவும் அதனை கருதிக்கொண்டு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்தினை உள்வாங்கி அந்த பாதை திறப்புக்கு அனுமதி கொடுத்தார்.

முதன்முதலாக யுத்த முடிவு அடைந்த பின்னர் ஏ9 பாதையின் ஊடாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது குழுவினருடன் பயணத்தை ஆரம்பித்தார். பயண நடுவில் முறிகண்டி ஆலயத்தில் பூஜைகள் இடம் பெறாததை அவதானித்தார். அங்கு சில மணி நேரம் தங்கி விநாயகப் பெருமானுக்கு பொங்கலிட்டு அந்த பூஜைக்குரிய ஒழுங்குகளை மேற்கொண்டு திருமுறுகண்டி ஆலயம் நிரந்தரமாக திறப்பதைக்கும் வழி கோரினார் .இதனை தமிழ் மக்கள் நன்றி உணர்வுடன் பார்க்கின்றார்கள். மக்கள் நலனே தனது குறிக்கோள் என்ற தொணியில் ஏற்படும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏ9 பாதை திறப்பிற்கு வித்திட்டவர் என்பதை யாவரும் அறிந்ததே நிச்சயமாக இப்பணிகள் எல்லாம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். நிச்சயம் மக்கள் ஆதரவு கொடுத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை பலம் பெறச் செய்வார்கள் என தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.