ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் பங்கேற்கும் மக்கள் மன்றம் சனிக்கிழமை (09.11.2024) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் நடைபெறுகின்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் .ஏற்பாட்டில் இதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இது நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில் சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (தமிழரசு கட்சி)

சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (சுயேச்சைக்குழு 14)

முதுநிலை சட்டத்ரணி ந.சிறிக்காந்தா (ஐ.த.தே.க.)

சட்டத்ரணி வீ.மணிவண்ணன் (த.ம.கூ)

அருத்தந்தை ஜெயக்குமார் அடிகளார்

கலாநிதி விக்னேஸ்வரன் அரசவியல் துறை யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்

திருமதி கோதலை மதன் முதுநிலை சட்டத்துறை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகியோர் இதில் பேச்சாளராகக் கலந்து கொள்ளுகின்றனர்.

இதில் கலந்துகொள்ள சகலருக்கும் பொதுவான அழைப்புதலும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)