சமூர்த்தி அதிஸ்டலாபச் சீட்டிலுப்பின் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(08)சம்மாந்துறை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா கலந்து கொண்டு வாழ்வாதார பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஹம்சார்,சமூர்த்தி பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மற்றும் உதவி முகாமையாளர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.