திருகோணமலை-மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெவனிபியவர பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையினால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக மஹதிவுல்வெவ தெவனிபியவர கிராம மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த பதினைந்து நாட்களில் காட்டு யானைகளினால் 13 வீடுகள் நாசமாகியுள்ள போதிலும், வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் குறித்த கிராமத்துக்குள் காட்டு யானையின் தொல்லை வீடுகள் நாசமாக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தி இருந்த போதிலும் மொரவெவ பிரதேச செயலாளருக்கு கிராம உத்தியோகத்தர் ஊடாக தெரியப்படுத்தி இருந்த போதிலும் எது இது நடவடிக்கை எடுக்கவில்லை எனுவும் குறிப்பிடுகின்றனர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், காட்டு யானையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்