அரசாங்க அதிபருடன் அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (07) கலந்துரையாடல் இடம் பெற்றது.

பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளும் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாவட்டத்தில் பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பாக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது அளிக்கை செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

IOM, எஸ்கோ (ESCO) ), லிப்ட் (Lift), AMCOR , ICMP உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு