75 ஆண்டுகளாக, உலக சமூகம் நவம்பர் 8 ஆம் திகதியை உலக நகர திட்டமிடல் தினமாக அறிவித்துள்ளதோடு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாக வரவிருக்கும் எதிர்காலத்திற்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான முறையில் நகர வடிவமைபுத் திட்டங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதாகும்.
இலங்கை நகர திட்டமிடுபவர்கள் நிறுவகத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து இந்த வருடத்தின் சர்வதேச கருப்பொருளான “திட்டத்தினால் வீடு கட்டப்படுகிறது”, உள்நாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு நெருக்கமானதாக கொண்டு வரவுள்ளதுடன், 2024 ஆண்டின் உலக நகர திட்டமிடல் தினம் ” இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியம் எங்கள் வீடு” என்ற தொனிப்பொருளின் கீழ் குருநாகல் நகரின் மையத்தில் கொண்டாடப்படுகிறது. இளம் நகர திட்டமிடுபவர்கள் மன்றமும் இந்த திட்டத்தில் பங்களிக்கிறது. நவம்பர் 8ஆம் திகதி காலை குருநாகல், கிரிவவில, கெமிலா விழா மண்டபத்தில் விசேட சொற்பொழிவு நடைபெறவுள்ளதுடன், பிற்பகல் அரண்கலே ஆரண்ய சேனாசனபூமிக்கான களப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கையின் அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நகரத் திட்டமிடலுக்கு நெருக்கமாக கொண்டு வருவதன் மூலம் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் திட்டங்களை உருவாக்குதல் இந்த 75 வது முழு ஆண்டு கொண்டாட்ட நாளில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது.
உலக நகர திட்டமிடல் தினம் 1949 இல் பேராசிரியர் கார் லோஸ் மரியாவால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது தொழில்சார் ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் வகையில் நகரங்களை உலக சமூகம் வாழக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, சர்வதேச ஒத்துழைப்புடன் நகரத் திட்டமிடலில் புதுமையான யோசனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. மேலும், உள்ளூர் நகர திட்டமிடுபவர்களுக்கு இயற்கையையும் பாரம்பரியத்தையும் இணைத்து பொருளாதார நன்மைகளை அதிகரிக்கும் உத்திகளைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்ச்சின் செயலாளர் ஏ. எம். பி. எம். பீ. அத்தப்பத்து, கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் நிபுணர் கலாநிதி காமினி விஜேசூரிய இங்கு முக்கிய உரையை ஆற்றவுள்ளார்கள்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ஏ. பி. குமுதுலால், நகர திட்டமிடல் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர் என்.ஏ.எஸ்.என். நிஸ்ஸங்க மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பிரத்தியேகச் செயலாளர் பொறியியலாளர் சந்தன பண்டார உள்ளிட்ட அந்த அதிகார சபையின் நகர திட்டமிடல் துறை அதிகாரிகள் மற்றும் நகர திட்டமிடல் நிறுவன உறுப்பினர்களும் இணைந்து இந்த நிகழ்வில் பங்காற்றவுள்ளனர்.
நன்றி.
ப்ரெட்ரிக் ரோட்ரிகோ
கிதாமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளர்