தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட எல்லைப்பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறும் வடிசாரய உற்பத்தி தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், சக கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா 06 பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பரல்களுக்கு சொந்தமான சந்தேக நபர்கள் இன்மையால் அவ்விடத்தில் அதனை அழித்துள்ளார்கள்.