நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் வேட்பாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்யிருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் அரச பதவிகளை வழங்கவில்லை.இது முழு நாட்டிற்கும் சாபக்கேடு.
எதிர்கால சந்ததியை சரியான முறையில் வழிநடத்த வேண்டுமானால் ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.
முன்பள்ளி ஆசிரியர்கள் விடயத்தில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு முன்னின்று செயற்படும்.
இலங்கை முழுவதிலும் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.