எனக்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்ய முடியும் என்பதைச் செய்து காட்டுகின்றேன்

திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியின் மரச் சின்னத்தில் 3ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபபை ஆதரித்து நேற்று முன்தினம் புதன்கிழமை இளைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கோஷத்துடன் மாளிகைக்காடு சந்தியில் இருந்து இளைஞர்கள் புடை சூழ முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஊர்வலமாக பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தினை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டடார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் பிர்தௌஸ், ஜி.எம்.எம்.எஸ். வித்தியாலய முன்னாள் அதிபர் சியாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெருமளவான இளைஞர்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டத்தின் கல்முனைப் தொகுதியில் 3ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இளைஞர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கம் ஏன் இடம்பெற்றது, இதன் மூலம் எமது சமூகம் அடைந்த நன்மைகள் என்ன? போன்ற ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததுடன் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், இந்த இளைஞர்களின் கல்வி, தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் பல திட்டங்களை நடை முறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறியதுடன் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்ய முடியும் என்பதைச் செய்து காட்டுகின்றேன் என கருத்துரை வழங்கினார்.

இராப்போசணத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றி வேட்பாளர் சிராஸ் மீராசாஹிபின் மரச்சின்னம் 3ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட டீ சேட் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்று, வருகை தந்த அத்தனை இளைஞர்களுக்கும் டீ சேட் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலாநிதி சிராஸ் மீராசாஹிப்