சங்கு வேட்பாளர் பிரகாஷ்ஷின் பொத்துவில் அலுவலகம் திறந்து வைப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஷ்ஷின் பொத்துவில் பிரதேச தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (5) செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில் முதன்மை வேட்பாளர் ச.நேசராசா உள்ளிட்ட வேட்பாளர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. அவ் பகுதியில் வசிக்கும் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். வேட்பாளர் அவர்களால் மக்களுக்கு தனது எதிர்கால நடவடிக்கை பற்றி தெளிவூட்டினார்.

விநாயகபுரத்திலும் அலுவலகத் திறப்பு விழா இடம் பெற்றது.
( வி.ரி.சகாதேவராஜா)