கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2024. வித்தகர், இளம் கலைஞர் விருதுகள் சிறந்த நூல் பரிசுகள் அறிவிப்பு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் விருதுகள் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை வித்தகர் விருதுகள் 15 பேருக்கும், இளங்கலைஞர் விருதுகள் 18பேருக்கும், சிறந்த நூற் பரிசு (சாஹித்ய விருது)கள் 5 பேருக்குமாக 38பேருக்கு இலக்கிய விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மாவட்டரீதியாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி, இலக்கியத்துக்கான வித்தகளர் விருதுகள் திருகோணமலையைச் சேர்ந்த ஹயாத்து முஹமது ஹலால்தீன் மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி. பரமேஸ்வரி இளங்கோ, உதுமாலெப்பை முகம்மது பௌஸ், அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி டேவிட், பி.டப்ளியூ. சந்திரசிறி நாட்டாரியல் துறையில் அம்பாரையைச் சேர்ந்த பி.ஏ.டி. கருணாரெட்ண, உதுமாலெப்பை ஆதம்பாவா ஊடகத் துறையில் அம்பாரையைச் சேர்ந்த சுபைர் ரபீக், ஆற்றுகைத் துறையில் அம்பாரையைச் சேரந்த பி.டி.ஜீ. பந்துல குமார, திருகோணமலையைச் சேர்ந்த திருமதி. சுலோஜனா தேவராஜன், திருமதி. இந்திராகாந்தி ராமலிங்கம் மட்டக்களப்பைச் சேர்ந்த தேவநாயகம் அலோசியஸ், பல்துறைக்கான விருதை மட்டக்களப்பைச் சேர்ந்த கலாநிதி. முத்துராஜா பிரிம்ராஜ் ரவிச்சந்திரா அம்பாரையைச் சேர்ந்த திருமதி. அல்பேர்ட் சிவகாமிதேவி, அச்சிமுஹமது தாஜீன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

இளங்கலைஞர் விருதுகளை, இலக்கியத் துறைக்காக திருகோணமலையைச் சேர்ந்த நஸார் முகம்மது இஃஜாஸ், அம்பாரையைச் சேர்ந்த றுஸீட் பாத்திமா முஜாமலா, திருமதி நதீகா போபிட்டிய, திருமதி பி.கே.ஏ. நில்மினி சமரதுங்க ஆகியோரும் நாட்டாரியல் துறைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா ஜிப்ரியா, தங்கவேல் சுமன் ஆகியோரும், ஊடகத்துறைக்காக அம்பாரையைச் சேர்ந்த அப்துல் றாசிக் அஹமட் நபாயிஸ், நுண்கலைத்துறைக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த வேதாரணியம் ஹோகுலரமணன், ஆற்றுகைத்துறைக்கு திருகோணமலையைச் சேர்ந்த செல்வி. கேதாரிணி சிவாநந்தராசா, மட்டக்களப்பைச் சேர்ந்த ராஜேந்திரம் தனஞ்சயன், கதிரேசன்பிள்ளை சந்திரமோகன், சண்முகம்பிள்ளை செல்வபிரகாஸ், செல்வி. சுந்தரலிங்கம் கிஷானி, அம்பாறையைச் சேர்ந்த திருமதி ஆர்.சி. தரங்கனி, ஆர்.எஸ்,. பள்ளேகெதர, திருமதி எச்.எம். மாலனி ஹேரத், பல்துறைக்காக திருகோணமலை ஜுனைட் முஹம்மது இஹ்சான், அம்பாரையைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா ஹிஜாஸ் அஹமட் ஆகியோருக்கும் பெறுகின்றனர்.

சிறந்த நூற் பரிசு (சாஹித்ய விருது)கள் புதுக்கவிதை நூலுக்காக – சிவானந்தராஜா கதன் (காரையான் கதன்) எழுதிய “புழுதி”, புலமைத்துவ ஆய்வு நூலுக்காக அருளானதம் சுதர்சன் எழுதிய “மட்டக்களப்பு மந்திர சடங்குகள்”, மரபுக்கவிதை நூலுக்காக முஹம்மது சாலிஹ் அப்துல் ஹை எழுதிய “நிலவைக்கேட்டுப்பார்”, நாவலுக்காக முருகையா சதீஸ் எழுதிய “ஆறாத வடு”, வரலாற்று நூலுக்காக தவராஜா தனுஷ்கர் எழுதிய “வரலாற்று சிறப்பு மிக்க அகஸ்தியர் ஸ்தாபனம்”, சிறுவர் இலக்கியத்துக்காக அபுசாலிகு மீரா முகைதீன் எழுதிய “வண்டில் மாமா” நாடகம் – கூத்து நூலுக்காக சுந்தரலிங்கம் சந்திரகுமார் எழுதிய “வீதிநாடகங்கள் பனுவலும் ஆற்றுகையும் , இலக்கிய சஞ்சிகைக்காக திருமதி. சித்தி மஷூறா சுஹூறுதீனின் “அவரி, நாட்டார் இலக்கியத்துக்கா – ஐ.ஏ.ஹஸன்ஜி எழுதிய “இளவேனிற் காலமும் கானங்களும்”, சமூக விஞ்ஞானம் (ஆயுள் வேதம்) துறைக்காக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைஸல் எழுதிய “நலன் தரும் மருத்துவம்”, சமூக விஞ்ஞானம் (ஆன்மீகம்) நூலுக்காக அருளம்பலம் குகராஜா எழுதிய “இந்துசமய மரணக்கிரியைகளில் சவ அடக்கம் ஒரு பார்வை”, சமூக விஞ்ஞானம் (சோதிடம்) நூலுக்காக கணபதிபபிள்ளை விஸ்வலிங்கம் எழுதிய “மனையடி சாஸ்த்திரம்” ஆகிய நூல்கள் பரிசு பெறுகின்றன.