இம்முறை இடம் பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பானது அமைதியான முறையில் இடம் பெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 116 உத்தியோகத்தர்களும் சமூக நீர்வழங்கல் சபையின் 05 உத்தியோகத்தர்களும்,கால் நடை திணைக்களத்தின் 02 உத்தியோகத்தர்கள் என மொத்தமாக 123 வாக்காளர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தனர்.
சுமூகமான முறையில் இடம் பெற்ற தபால் வாக்களிப்பின் போது அதனை கண்காணிக்க பெப்ரல் அமைப்பு மற்றும் அரச கண்காணிப்பினரும் களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.