சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக்கான காரியாலயம் திறப்பு.

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு -14) சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் 03/11/2024 ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி நுணாவில் பகுதியை அண்மித்து ஏ9வீதியில் திறக்கப்பட்டுள்ளது.

சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்;

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும்-முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.