சமூக விரோதச் செயல்கள் புரியாத நேர்மையானவர்களை மக்கள் தேர்தலின் போது தெரிவு செய்ய வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நேர்மையான சமூக செயற்பாட்டாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.
ஊழல் மோசடி கையூட்டு திருட்டுக்கள் செய்கின்ற மோசடிக்காரர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. மேலும், கடத்தல் கப்பம் காணாமல் ஆக்கியவர்கள்,காட்டிக் கொடுத்த காக்கைவன்னியர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
பணம், மதுபானங்கள் கொண்டு மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சூறையாட நினைக்கின்ற பிற்போக்கு வாடிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். இவ்விடயத்தில் மக்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். மக்கள் ஏமாளிகளாக இருந்தால், ஏமாற்றிப் பிழைப்போர் வென்று விடுவார்கள்.மேலும், மக்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் ஏமாற்று வித்தையாளர்கள் மக்களின் தலைகளில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.
பின்னர் மக்களுக்கான அரசியலை விடுத்து சுயநல அரசியலைச் செய்வர்க்கள். இளைஞர்களைத் தவறான வழிகளில் நடாத்தும் அரசியல்வாதிகளையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.இளைஞர்களின் எதிர்காலம் சூனியமாகி விடக்கூடாது.