கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

(அஸ்லம் எஸ்.மெளலானா)

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (01) பதிவு செய்தனர்.

கல்முனை மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த வாக்களிப்பில் அத்தாட்சிப்படுத்தும் அலுவலராக உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் கடமையாற்றினார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 49 உத்தியோகத்தர்கள் இதன்போது தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான அரச அலுவலகங்களில் நேற்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.