தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக இங்கு இணைந்து போட்டியிடுகிறோம்

தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக இங்கு இணைந்து போட்டியிடுகிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் (29)மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் வடகிழக்கு மாகாணங்களில் மற்ற இடங்களில் இவ்வாறின்றி திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ புளட் என இணைந்து போட்டியிடுகிறோம் இதன் மூலம் மக்கள் மத்தியில் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க பல விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அதிகாரம் தேவை இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த உரிமைகளுக்காக பல போராட்டங்களை எழுபது வருடங்களாக போராடி வருகிறது தந்தை செல்வா தமிழர்களின் பாரம்பரியம் கலாசார பண்பாடுகளை பாதுகாக்க இக் கட்சியை உருவாக்கினார் அந்தளவுக்கு தமிழ் தேசியத்தை பாதுகாக்கவே தமிழ் அரசு கட்சி தோற்றம் பெற்றது.

அதிகளவான வாக்குகளை அளிப்பதன் மூலம் எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் அண்ணளவாக ஐம்பதாயிரம் பேர்கள் வாக்குகளை மக்கள் வழங்க வேண்டும் .பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தால் மக்களது உரிமைகள் பாதிக்கப்படும்.தமிழ் மக்களின் உரிமைகளை நிலை நாட்டவும் இருப்பையும் பாதுகாக்க தமிழ் பிரதிநிதித்துவம் தேவை என்றார்.