வேட்பாளர் ஜெமீலுக்கு சாய்ந்தமருதில் பெண்கள் வரவேற்பு !

கிழக்கு மாகாண சபையில் இரு தடவைகள் உறுப்பினராக, குழுக்களின் தலைவராக, திணைக்கள தலைவராக இருந்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு சிலிண்டர் சின்னம் இலக்கம் மூன்றின் வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்கள் செய்த மக்கள் பணியை கௌரவிக்கும் விதமாக சாய்ந்தமருது தாய்மார்கள் வரவேற்று ஆதரவளித்த சந்திப்பு கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். சாஹிர் ஹுசைன் அவர்களின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்- கமரூன் பிரதேசத்தில் நேற்று (28) இரவு நடைபெற்றது.

முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் ஏ.எம். ஜெமீல் செய்த நிறைய சேவைகள் செய்த சேவைகள் பற்றி சிலாகித்து பேசிய தாய்மார்கள் தமது ஆதரவை ஜெமீல் அவர்களுக்கு வெளியிட்டதுடன் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய கரத்தினை பலப்படுத்தி ஜெமீல் அவர்களின் வெற்றிக்காக களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய முன்வந்துள்ளார்கள்.

இந்த மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சுஹைல் அஸீஸ், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எப்.எம். தில்சாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு செய்தியாளர்