இந்த நாட்டில் செயற்படுகின்ற சகல ஊடகவியலாளர்களுக்கும் ஒர் பாரிய பொறுப்புகள் உள்ளது. நீங்கள் எழுதும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் வன்முறைகள் பற்றிய செய்திகள் பந்திகளில் சிறுவர்களது உண்மையான கலர் வர்ணப் படங்கள் வசனங்களின் செய்தித் தலைப்புகளை இடும்போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு செய்தியையும் பல்வேறு வேறுபட்ட தலைப்புகளில் பல பத்திரிகை ஊடகங்களில் வெளிவருகின்றன. இதில் வாசகர்கள் நம்பகத்தன்மை இல்லாமல் செய்யப்படுகின்றன. என தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்கள் உரையாற்றினார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஊடகவியலாளர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தடுத்தல் மற்றும் செய்தி அறிக்கையிடும் போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஸ்ரீஜயவர்த்தன புர கோட்டையில்; உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் அக்டோபர் 25 ஆம் திகதி கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் ஊடக அமைச்சின் ெ;செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி இனோக்கா ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் சட்ட அலுவலர் சஞ்சீவனி அபயகோன், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நிரோசன் தப்பவிட்ட, சிறுவர் மனோ தத்துவ மருத்துவர் நிபுணர் தர்ஷினி ஹெட்டியராச்சி ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை ஆற்றினார்கள்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சின் செயலாளர் –
சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான செய்திகளை ஊடகவியலாளர்கள் ஒரு செய்திகளை பிரசுரிக்கும்போது பல பத்திரிகைகள் ஊடகங்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுகின்றன.
நானும் ஊடகவியலாளராக மிகவும் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர்களிடம் கீழ் சேவையாற்றி இருக்கிறேன். அவர்கள் தந்த பயிற்சிகள் இன்றும் எனக்கு ஆழப் பதிந்துள்ளன ஆகவே தான் சிறுவர்கள் வன்முறை துஷ்பிரயோகங்கள் பற்றிய நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கு முன்னர் ஊடகவியலாளர்கள் ; தமது ஊடகங்கள் தீர்ப்புக்களை சம்பவம் நடைபெற்ற அன்றே வழங்கிவிடுவார்கள். ஆனால் நீதிமன்றம் அவ் வழக்கை விசாரித்து குறைந்தது 6 மாதங்கள் பின்னரே தீர்ப்புக்களை வழங்கும்.
உண்மையான பாதிக்கப்பட்ட அல்லது மரணமான சிறுவர்களின் படங்கள் வர்ண கலர் பிரசுரிப்பது. அவர்கள் பாடசாலைகள், ஊரின் பெயர் குடும்பத்தின் பெயர்கள் இனம் மதம் என்பது பிரசுரித்து ஊடகமே பிரசுரி கின்றனர் இவைகள் தவிர்க்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட சிறுவன் அல்லது சிறுமி அல்லது அந்த குடும்பத்தை சமுகத்திலிருந்து ஊடகங்கள் வேறுபடுத்தி வருகின்றன. . உங்கள் பத்திரிகைகள் ஊடகங்கள் செய்தி முதல் தர செய்திப் போட்டிக்கு இவ்வாறு அறிக்கை இட வேண்டாம் அல்லது பத்திரிகை விற்பனைக்காக சிறுவர்கள் துஷ்பிரயோகம் கொலைகள், விபத்துகள் போன்றவற்றில் இருந்து நடுநிலையாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செய்திகளை எழுதுதல் வேண்டும் என அமைச்சின் செயலாளர் அங்கு கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் வேண்டிக் கொண்டார்.