2024 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மருதமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகளில் ஓர் அங்கமாக “கீறல்” சஞ்சிகையின் 11 ஆவது இதழ் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கவிஞர் சட்டத்தரணி ஏ.எல். றிபாஸ் (அலறி) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது கீறல் சஞ்சிகையின் ஆசிரியர் அஸிஸ் எம்.பாயிஸ், நிகழ்வில் பங்கேற்றிருந்த அதிதிகள் மற்றும் கலை, இலக்கியவாதிகளுக்கு சஞ்சிகையின் சிறப்பு பிரதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கவிஞரும் விமர்சகருமான ஜெஸ்மி மூஸா, வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் விஜிலி மூஸா, எழுத்தாளர்களான ரகுமான் ஏ.ஜமீல், டீன் கபூர், கல்முனை சமீம், எஸ்.ஏ. கப்பார், இசட்.எம். நிலாம் நழீமி, மாஜிதா தௌபீக், நிஷா இஸ்மாயில், ஜெசிமா முஜீப், பத்ரு நிஷா, சுமையா ஜெஸ்மி, எஸ்.முன்சிலா, மலீஸ் அமீன் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள், வாசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மருதமுனை பொது நூலகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள்
ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.