முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்று கொட்டாஞ்சேனையிர் இடம்பெற்றது.
ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஆலய பிரதம குரு சுப்ரமணிய குருக்கள் அவர்களின் தலைமையில் பூஜைகள் இடம்பெற்று மற்றும் சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தமிழ்நாடு நவக்களனிபுர சிவா குருக்கள் அம்பிகா ஜோதிடம் சிவனேசன் சர்மா கொழும்பு கொச்சி கடை பொன்னம்பலாகேஸ்வர உதவி குரு ஈசன் சர்மா மற்றும் தர்சக சர்மா ,யாழ் ரகுபதி சர்மா ஆகியோரும் ஆசி வழங்கினர்.
ஆலய தர்மகத்தாக்களினால் ஆலய அறங்காவலர் சபையினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதன் பின்னர் ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் இருந்து விவேகானந்தா சபை வரை மேளதாளங்களுடன் அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.
பின்னர் விவேகானந்தா சபையில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கிரன்பாஸ் விஜிதகேரத் இலங்கை நாடு ஒற்றுமையாக பல்லினம் வாழும் மக்கள் வாழ்வதற்கான ஒரு முன்னுதாரணமாக இம்முறை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இம்முறை கொழும்பு மாநகரில் போட்டியிடுகின்றது. இலங்கைவாழ் மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.
மற்றும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்மைய கொழும்பு நரில் தங்களது வாழ்வு சுபீட்சம் அடைய நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி தருவார் என பாபுசர்மா தனது உரையில் உறுதிப்படுத்தினார்.
மேலும் நாங்கள் எப்போதூம் மக்களுக்கான சேவையில் இருக்கிறோம். மக்களுடைய தேவைகளை அறிந்து அந்தந்த நேரங்களில் செய்யக்கூடிய காரியங்களை கடினமான காலங்களில் இருந்து செய்து வருகின்றோம். தொடர்ந்தும் மக்களுக்காக செயற்படுவோம் பயணிப்போம் என டக்ளஸ் தேவானந்தா தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார் .
மற்றும் நிகழ்வின்போது பலரால் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தியதோடு தமிழ்நாடு களனிபுர அறநெறி பாடசாலை தலைமை ஆசிரியர் கோசலா சிவனேசன் சர்மா, அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வருடாந்த கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐயப்ப சங்க ஒன்றிணைப்பாளர் பிச்சைகிருஷ்னா அவர்கள் கொழும்பிற்கும் தூத்துகுடிக்கும் இடையிலான கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை கடிதத்தினையும் மேடையில் வைத்து கையளித்திருந்தார்.