மாந்தை மேற்கு பிரிவில் முதியோர் தின விழா

‘கண்ணியத்துடன் முதுமை உலகலாவிய ரீதியில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு முறைமைகளை பலப்படுத்துவதன் முக்கியத்துவம்’ எனும் தொணிப்பொருளில் வருடந்தோறும் ‘டெப்லிங்’ பணியகத்தினால் நடாத்தப்படும் முதியோர் தின விழா இவ் நடப்பு ஆண்டிலும் (2024) மிக சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகமும் இலங்கை மெதடிஸ்த திருச்சபை ‘டெப்லிங்’ பணியகமும் இணைந்து மாந்தை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இவ் விழாவை கொண்டாடினர்.

கடந்த புதன்கிழமை (23) நடைபெற்ற இவ்விகழ்வானது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.சீ.அரவிந்தராஜ் தலைமையில் காலை 10 மணியளவில் இவ் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்சிலி வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் மெதடிஸ்த திருச்சபையின் சமூதாய பணியகத்தின் இயக்கனரும் ‘டெப்லிங்’ பணியகத்தின் பிரதான இணைப்பாளருமான அருட்திரு அன்றனி சதீஸ் , மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மன் டெனி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் ‘டெப்லிங்’ பணியத்தின் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் . மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் அரச ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் முதியோர்களின் கலை நிகழ்வுகளும் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)