ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (25) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை விட்டு மாணவி வீடு செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதான வீதியால் வேகமாக பயணித்த ஆட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்தை பாடசாலை மாணவி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)