சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் பல்வேறு வேலைத்திட்டங்கள்

(ஏறாவூர் நிருபர்- நாஸர்) 

விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பாக                                              சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் பல்வேறு வேலைத்திட்டங்கள்                                    கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் விசேட கலை கலாசார நிகழ்வொன்று விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஏறாவூர் – ஐயங்கேணி ஹிஸ்புல்லா வித்தியாலயத்தில்   இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்ஜிஏ. நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்- முறைசாராக்  கல்விப்பிரிவிற்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்பிஎம். த்தீக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் ஆசிரியர் எம்ஏஎம்.  புஹான் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விசேட தேவையுடைய மாணவர்களின் ஆற்றலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களது கலைநிகழ்ச்சிகள்  அரங்கேற்றப்பட்டன.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் இந்த திட்டத்தை அமுல்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை  ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன