(எருவில் துசி) நேற்று (22) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போது…..
வறிதற்ற நிர்வாக குழு அகற்றப்பட வேண்டும் என தன்னால் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு நடைபெறுவதனால் விபரித்து கூற முடியாது என்றும் கடந்த காலத்தில் தாம் சங்கு சின்னத்துக்கு ஆதரித்ததாகவும் அது தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதாரவு மாத்திரமே தவிர நான் எப்போதும் தமிழ் அரசு கட்சி சார்ந்த ஒரு மூத்த உறுப்பினர் நான் தற்போது கட்சியின் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்த அவர் கட்சிக்குள் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதனை சீர் செய்ய வேண்டும் எனவும் கருத்துரைத்ததார்.
சங்கு சின்னமானது பொது வேட்பாளருக்காக தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சின்னமாகும் அது அவ்வாறிருக்க தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கட்சிக்கான சின்னமாக பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இச் சின்னத்தை எவரும் பயன் படுத்த கூடாது என ஆரம்ப காலத்தில் பொது வேட்பாளரை ஆதரித்த போது கருத்து முன்வைக்கப்படடிருந்ததும் குறிப்பிடத்தக்கது