பொத்துவிலுக்கு குடிநீரையும் தனியான கல்வி வலயத்தையும் பெற்றுத்தருவதாகக்கூறி வருடக்கணக்கில்

அரசியல் செய்தவர்கள் இப்போது மக்களை ஏமாற்ற என்ன பொய் சொல்லப்போகிறார்கள்!
திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் அமான் அஸீஸ்
அபு அலா 
பொத்துவில் மக்களுக்கான சுத்தமான குடிநீரினையும் தனியான கல்வி வலயத்தினையும் பெற்றுத்தருவதாகக் கூறி வருடக்கணக்கில் அரசியல் செய்தனர். ஆனால் அதில் ஒன்றும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினைக்கு நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் நிரந்தரமான தீர்வு வழங்ப்படும் என திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் அமான் அஸீஸ் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
உலகலாவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு பிரதேசமாக பொத்துவில் காணப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் இங்குள்ள அறுகம்பே பிரதேசத்துக்கு வந்து செல்கின்றனர். இருந்தாலும் இந்த பிரதேசம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது.
குறிப்பாக இங்கு காணிப்பிரச்சினை, குடிநீர் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அறுகம்பே சுற்றுலா பிரதேசம் நவீன வகையில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அங்குள்ள வீதிகள் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன. பொத்துவிலில் ஒரு பொதுவிளையாட்டு மைதானமில்லை. தனியான கல்வி வலயம் குறித்து வருடக்கணக்கில் பேசுகிறார்கள். ஆனால், ஒன்றும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
இந்த ஊரினுடைய தேவைகளையும் மக்களுடைய பிரச்சினைகளையும் நிறைவேற்றுவதாக கூறி அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்கள், அதில் எவற்றினையும் நிறைவு செய்ததாக தெரியவில்லை. ஊரினதும் மக்களுடையதும் பிரச்சினைககள் அப்படியே இருக்க அரசியல்வாதிகள் மாத்திரம் சுகபோகம் அனுபவித்தனர்.
எனது தந்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.பி.ஏ.அஸீஸ் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர். அவர் பொத்துவில் பிரதேச மக்களின் தேவைகளையறிந்து சேவையாற்றிய ஒருவர். அவருடைய மறைவுக்கு பின்னர் இந்தப் பிரதேசத்திலே ஒரு சரியான அரசியல் தலைமை இல்லை.
இவ்வாறான நிலையில் பொத்துவில் மக்களின் அழைப்பினை ஏற்று இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் எனது வெற்றிக்கு இப்பிரதேசம் பூரண ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையான விடயம் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்