தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை!

கொழும்புவாழ் மக்கள் குறிப்பாக தோட்டப்புறங்களில் வாழும் மக்கள் மிகுந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுவது பற்றியதொரு கலந்துரையாடல் ஒன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை வேட்பாளர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ் ராஜேந்திரன் மற்றும் தேசியப்பட்டியல் அங்கத்தவர் பாபுசர்மாவுடன் கொழும்பு முகத்துவாரத்தில் இடம் பெற்றது.

இதன்போது தோட்டப்புற வாழ் மக்களின் சந்திப்பில் அவர்களது குடியிருப்புகளில் குடிநீர் வசதி இல்லாத கஷ்டங்களையும் மற்றும் போதியளவு மலசலகூடம் இல்லாமை மற்றும் போதியளவு சுகாதாரமின்மையும் பற்றிய விடயங்களை எடுத்து கூறியதுடன் அவர்களது சுய வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என தங்களது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை வேட்பாளரான எஸ். ராஜேந்திரன் , தான் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது பல தோட்டப்புறவாழ் மக்களுக்கு அவர்களுடைய கஷ்டங்களை உணர்ந்தவனாக பல்வேறு உதவி திட்டங்களையும் சேவையையும் செந்திருந்தேன். இப்போது பொது தேர்தலில் இறங்கியுள்ள நிலையில் நிச்சயமாக இந்த மக்களுடைய பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பதற்காக எங்கள் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி உரிய இடங்களுக்கு கொண்டு சென்று தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைககளை மேற்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது தோட்டப்புற மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தேசியப்பட்டியர் உறுப்பினர் பாபுசர்மா உறுதி மொழி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

kajaana chandrabose
journalist
(Dip.in.journalism)