கரிசனை இல்லாமல் செயற்ப்படும் புதிய ஜனாதிபதி!

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு மற்றும் காணாமல் போனோர் விடயத்தில் எந்தவித கரிசனையுமில்லாமல் செய்றபடுகின்றார் என தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இளையதம்பி சிறிநாத் எமக்கு உரிமைகளையோ அல்லது கடந்த காலங்கிளல் நடந்த அநீதிகளுக்கான தீர்வுகளையோ இவர்களிடமிருந்து எதிர்பார்க முடியாது என்றும் கூறினார்.

தமிழ் மக்களின் உரிமை சார்ந்து விடயங்களுக்காக போராடிய தொடர்ந்தும் போராடக்கூடிய ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற காரணத்தினாலேயே நான் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இ.சிறநாத் தனது அலுவலகத்தை வியாழக்கிழமை (17) திறந்துவைத்தார். இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – புதிதாக வந்த ஜனாதிபதி தமிழ் மக்களின் உரிமை சார்ந்து எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை அவர் முன்னெடுக்க முயற்சித்தால் சிங்கள பெரும்பாண்மை சமூகம் அதற்கெதிராக போர்கொடி தூக்கும்.

அபிவிருத்தி என்ற மாயையில் தமிழ் மக்கள் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக்கூடாது. விளையாட்டு உபகரணங்களை வழங்கி காணிகளை அபகரித்து விளையாடுவதற்கு மைதானமில்லாத நிலையை உருவாக்குவார்கள். வனஇலாக, தொல்லியல் என்ற போர்வையில் எமது நில அபகரிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஆட்சிகள் மாறினாலும் தென்னிலங்கை சக்கதிகளின் ஆட்டங்கள் தொடர்கிறது. இதனை வெளிக்கொண்டுவருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியால் மாத்திரமே முடியும்.

நான் 17 வருடம் மருத்துவ துறையில் இருந்தேன். எல்லைக் கிராமங்களில் மாற்றுச் சமூகத்தினரின் சுகாதாரப் பிரிவிலிருந்த தமிழ் கிராமங்களை தமிழர் பகுதிகளில் இணைத்தேன் இதனால் முன்னாதள் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்னை அச்சுறுத்தினார் அதையும் தந்துரோபாயமாக கையான்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மருத்துதுறை காணாது, என்று அரசியலுக்குள் வந்தேன். தமிழ் மக்களின் உரிமை சார்ந்து செயற்படக்கூடிய கட்சி என்பதனால் நானும் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுகிறோன்.

தமிழர் பிரதேசங்களில் சேவையாற்ற புலம்பெயர் சமுகம் பெரிய நிதியுடன் காத்திருக்கிறது. சரியான முறையில் திட்டங்களை வகுத்து அதனைப் பயன்படுத்த வேண்டும் அதற்காக நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். மாவட்டத்தில் அறிவு சார்ந்த குழுக்களை நியமித்துள்ளோம். நான் பாராளுமன்றம் சென்றால் நிறைவேற்றுவேன்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை திருகோணமலை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும். ஆதற்காக தமிழ் மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

மட்டக்களப்பிலும் மக்களுக்கு மேய்ச்சல் தரை உற்பட பல பிரச்சினை உள்ளன. இவ்விடங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவேன். என்னை இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பில் வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு அனைவரது கைகளிலும் உள்ளது.

நான் இலங்கைத் தமிழரசு கொள்கையில் இருந்து ஒருபோதும் மாற மாட்டேன் – கட்சியை தமிழ் தேசியத்தை தமிழர் உரிமையை பாதுகாக்க என்னை பாராளுமன்றம் அனுப்புங்கள் என்றார்.
பேரின்பராஜா சபேஷ் 0771607555