இணக்க அரசியல் மூலம் 13யை அமுபடுத்தலாம்

13னை அமுல்படுத்த வேண்டும் என எப்போதும் வலியுறுத்தி வருபவர் டக்லஸ் தேவானந்தா. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு சிறந்த ஒப்பந்தமாகும். இது வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்பதை வலியுறுத்துபவர் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள்.

யாரும் பாராளுமன்றத்திற்கு வராத அந்த போர்க்காலகட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் தான் தமிழ் மக்களுக்கான விமோஷனத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இயங்குபவர் டக்ளஸ் தேவானந்தா. அதேபோன்று மாகாண சபை தேர்தலில் கூட பலர் புறக்கணித்த பொழுது அதிலும் முன்வந்து போட்டியிட்டு தமிழ் மக்களுக்கான ஜனநாயக பாதையை திறந்து வைத்தவர் டக்லஸ் தேவர் என்பதை தமிழ் மக்கள் யாரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார தூங்க காலத்தில் இந்து கலாச்சார அலுவலக அமைச்சராக இருந்த காலத்தில் பல இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி கொடுத்து மற்றும் தீவகம் முழுவதும் பாதைகள் அமைத்து தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழிவகைகளை செய்து கொடுத்தவர்.

படிப்படியாக ராணுவ கைவசம் உள்ள காணிகளை விடுவிப்பதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர். மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் சபரிமலை யாத்திரைகளுக்காக கேரளாவில் ஒரு துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்றும் அதேபோன்று யாத்திரைகளுக்காக கப்பல் போக்குவரத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் இதனால் அவர்களின் பிரயாணத்திற்கான செலவுகள் குறையும் என்றும் இக்கோரிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்தவர் என்றும் ஐயப்ப பக்தர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். அதேபோன்று முதன்முதலாக பாராளுமன்றத்தில் நந்திக் கொடியை பறக்க விட்டு நவராத்திரி பூஜைகளை ஏற்பாடு செய்திருந்தவர் என்பதை இந்து மக்கள் மனதில் வைத்திருக்கிறார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை முதன் முதலாக தமிழ் மக்களின் பலரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு டக்லஸ் தலைமையில் களமிறங்கி இருப்பதும் கொழும்பு வாழும் மக்களுக்கு அவர்களது சேவை பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது என பாபு சர்மா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

kajaana chandrabose