( வி.ரி. சகாதேவராஜா) 36 வருடங்கள் கல்விச் சேவையாற்றி ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இறக்காமத்தைச் சேர்ந்த ஏஎல்..றபீக் ஆசிரியருக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த வாரம் ஆசிரியர் தின நிகழ்வில் இடம் பெற்றது.
இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வும், 36 வருடம் சேவையாற்றி ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற .றபீக் ஆசிரியருக்கான பிரியாவிடை நிகழ்வும் அதிபர் எம்ஏஎம்..பஜீர் தலைமையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.
“மழை மேகங்களுக்கு மண்ணின் மரியாதை” எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இறக்காமல் கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்மூது லெவ்வை மற்றும் விசேட அதிதியாக ஆசிரிய ஆலோசகர் எஸ்எல்ஏ. முனாப் பா.அ.ச.செயலாளர் ஏ.கே..அஸ்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.