(எருவில் துசி) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் இரா.சாணக்கியன் அவர்களின் பட்டிருப்பு தொகுதிக்கான மக்கள் சந்திப்பு 13.10.2024ந் திகதி அவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பட்டிருப்பு தொகுதியில் உள்ள தமிழ் அரசுக்கட்சியின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு கட்சியின் வெற்றியினையும் தனது வெற்றிக்கு மக்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதன் போது கலந்துகொன்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் வட்டார ரீதியான முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவிக்கும் போது இன்றைய இந்த கூட்டத்திற்கு நாம் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து கலந்துரையாடல் நடாத்துவதற்காக அழைத்திருந்தோம் ஆனால் நாம் அழைப்பு விடுக்காத பலரும் இக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளமையானது சாணக்கியனின் வெற்றி மற்றும் கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
முதன்மை வேட்பாளர் இரா.சாணக்கியன் கருத்துரையாற்றும் போது களுவாஞ்சிகுடி கிராமத்துக்கான முகாமையை நான் சந்தித்திருந்தேன் அதன் போது அவர்கள் தமிழ் அரசு கட்சிக்கு தமது கிராமம் முழுமையான ஆதாரவு வழங்கும் என்று தமக்கு கூறியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் நான் எமது மக்களின் விடிவுக்காக பல வகையில் பாடுபட்டுள்ளதாகவும் அது மேலும் தொடரும் எனவும் அதற்கு தங்களின் ஆணையை வழங்குவீர்கள் எனும் நம்பிக்கை தமக்குள்ளதாகவும் எமது உரிமையுடன் அபிவிருத்தி பணிகள் பலவற்றை நான் மக்களின் நலன் கருதி ஊழல் இல்லாமல் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் தொரிவித்தார்.